ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. அது, பழுதடைந்து கம்பத்தில் உள்ள இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. மின்கசிவால் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் பாதிக்கப்படலாம். சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து உறுதி தன்மையை இழந்த மின்கம்பத்தை மாற்றி விட்டு புதிய கம்பம் நட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ், அக்ராபாளையம்.