தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யூனியன் மேல ஈரால் பஞ்சாயத்து வாலம்பட்டியில் மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருப்பதாக மேகலிங்கம் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து மின்கம்பம் நேராக மாற்றி அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்ைக மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.