காவேரிப்பாக்கம்-பாணாவரம் சாலையில் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் பன்னியூர் கூட்டுரோடு உள்ளது. இப்பகுதியில் வாலாஜா-பனப்பாக்கம், காவேரிப்பாக்கம்-சோளிங்கர் நெடுஞ்சாலைகள் சந்திக்கின்றன. பன்னியூர் கூட்ரோட்டில் ரூ.7 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்கை நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றினர். சாலை பணிகள் முடிந்ததும் உயர் கோபுர மின் விளக்கை அதே இடத்தில் அமைக்கவில்லை. அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவில் மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சிரமமாக உள்ளது. உயர் கோபுர மின் விளக்கை மீண்டும் அதே இடத்தில் அமைப்பார்களா?
-அய்யாசாமி, பன்னியூர்.