அரக்கோணம்-திருத்தணி, அரக்கோணம்-சோளிங்கர் நெடுஞ்சாலைகளில் போதுமான தெரு மின் விளக்குகள் இல்லை. இரவில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சைக்கிளில் செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலை முடிந்து இரவில் வீடு திரும்புவோர் சிரமத்துக்கு ஆளாகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதிய அளவில் தெரு மின் விளக்குகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜாராமன், அரக்கோணம்.