திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.பனப்பாக்கம்-டி.எடையார் கிராமத்திற்கு செல்லும் ஏரிக்கரை சலையில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களும் நடைபெற வாய்ப்புகள் அதிகமா உள்ளதால், மின்வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து அப்பகுதியில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.