உளுந்தூர்பேட்டையில் திருச்சி செல்லும் பிரதான சாலையில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி இரவு வேளைகளில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும் மின்விளக்குகள் இல்லாததால் இங்கு வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே மின்வாரியத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.