எரியாத உயர் கோபுர மின்விளக்கு

Update: 2026-07-26 19:08 GMT

திருப்பத்தூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் வெளிமாவட்டங்களுக்கும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் செல்ல தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் பஸ் நிலையத்துக்கு வருகிறார்கள். இதனால் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின் விளக்கு பழுதாகி உள்ளது. உயர் கோபுர மின் விளக்கை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவஞானம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்