கள்ளக்குறிச்சி அடுத்த உலகியநல்லூர் ஊராட்சி காலனி தெருவில் உள்ள மின்மாற்றியை தாங்கி நிற்கும் கம்பம் பலத்த சேதமடைந்து அதன் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. தற்போது மின்மாற்றி மிகவும் பலவீனமடைந்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதேனும் ஏற்படும் முன் மின்வாரியத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.