ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-08-08 10:49 GMT

தண்டராம்பட்டு ஒன்றியம் சதாகுப்பம் கிராமத்தில் ஒரு மின் கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது. அந்தக் கம்பம் கீழே விழாமல் இருக்க மரத்தால் முட்டுக்கொடுக்கப்பட்டு உள்ளது. சூறைக்காற்று வீசினால் மின்கம்பம் கீழே விழுந்து அசம்பாவிதம் ஏற்படும். பெரும் ஆபத்து ஏற்படாமல் இருக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பம் நட வேண்டும்.

சிவா, சதாகுப்பம்

மேலும் செய்திகள்