ஆபத்தான மின் கம்பம்

Update: 2025-07-20 17:16 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள வள்ளலார் நகர் போகும் சாலையில் மிக மோசமாக பழுதடைந்த நிலையில் மின் கம்பம் ஒன்று உள்ளது. அந்தக் கம்பத்தின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. அந்தக் கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து கீழே விழுந்து அசம்பாவிதம் நடக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பந்தப்பட்ட மின் வாரியத்துறையினர் நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

-அப்துல்சமது, தூசி. 

மேலும் செய்திகள்