ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-05-25 19:42 GMT

அரக்கோணம்-திருத்தணி மேம்பாலம் அருகே மங்கமாபேட்டை சாலையோரம் ஒரு மின் கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது. சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழுந்து அசம்பாவிதம் ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது. ஆகையால், பெரும் விபத்து ஏற்படும் முன் மின் கம்பத்தை மாற்ற மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுகுமார், அரக்கோணம்.

மேலும் செய்திகள்