ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-03-30 20:15 GMT

ஜோலார்பேட்டை ஒன்றியம் அம்மணாங்கோயில் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட அம்மணாங்கோயில் பகுதியில் புதுப்பேட்டை பகுதியில் இருந்து பாச்சல் நோக்கி செல்லும் சாலையில் சாலையோரம் ஒரு மின் கம்பம் உள்ளது. அது, சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து கீழே விழலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?

-ஆர்.சந்தோஷ், புதுப்பேட்டை.

மேலும் செய்திகள்