திருப்பத்தூர் அருகே தம்மனூர் கிராமத்தில் இருந்து ஜம்மணபுதூர் கிராமத்துக்கு செல்லும் சாலையில் டிரான்ஸ்பார்மர் அருகே ஒரு மின்கம்பம் சேதமடைந்துள்ளது. இந்த மின்கம்பத்தின் கான்கிரீட் பெயர்ந்து அதில் உள்ள இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.
-தமிழரசன், திருப்பத்தூர்.