உமி பறப்பதால் பாதிப்பு

Update: 2024-02-25 18:19 GMT

திமிரியில் ஒரு அரிசி ஆலைக்கு அருகில் பாத்திகாரன்பட்டி புதிய தெரு அமைந்துள்ளது. அந்தத் தெருவில் 60 வீடுகள் உள்ளன. அந்த அரிசி ஆலை இரவு பகலுமாக இயங்கி வருகிறது. அதில் இருந்து வெளியேறும் உமி, துசி அருகில் உள்ள வீடுகளுக்குள் பரவுகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் பாதிப்பை சந்திக்கின்றனர். காற்று, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. குடிநீரிலும் உமி படர்ந்து உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுத்துகிறது. அரிசி ஆலையின் உமி அருகில் உள்ள வீடுகளுக்குள் பரவாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

-பாலாஜி, திமிரி. 

மேலும் செய்திகள்