மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இதனால் நாளுக்குநாள் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உயர் கோபுர மின் விளக்கு இருந்தும், மின் விளக்குகள் எரிவது இல்லை. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இருட்டாக இருப்பதால் சமூக விரோதிகள் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் பூம்புகார்.