சத்தியமங்கலம்- அத்தாணி சாலையில் உள்ள பங்களாப்புதூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரமாக இரும்பு மின் கம்பம் உள்ளது. இந்த கம்பம் துருப்பிடித்து சற்று சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. அத்துடன் கம்பத்தின் அடிப்பகுதியின் நடுவில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் சாலையிலோ அல்லது சுற்றியுள்ள கடைகளின் மீது சாய்ந்து விழ வாய்ப்புள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?