மின் கம்பி சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-20 14:49 GMT


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பரிதியப்பர்கோவில் கருங்குழி குளம் உள்ளது. இந்த குளத்தை நான்கு ஊரை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் குளத்தின் நடுவே மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. மேலும் கம்பிகள் துருபிடித்து அறுந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் ஒரத்தநாடு.

மேலும் செய்திகள்