சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி மெயின் பைபாசில் விநாயகா பல் மருத்துவ கல்லூரி எதிரே உள்ள நெடுஞ்சாலையில் மின்கம்பத்தில் விளக்குகள் ஓராண்டு காலமாக சரி வர எரிவதில்லை. இதனால் அந்த சாலையில் செல்வோர் மிகவும் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சமந்தபட்ட துறை அதிகாரிகள் இந்த மின் விளக்குகளை எரிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், சேலம்.