மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவில் பகுதி, ஆற்றங்கரை செல்லும் சாலையில் தெருவிளக்குகள் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் கடந்த சில வாரங்களாக தெருவிளக்குகள் முறையாக எரிவதில்லை. இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இருளை பயன்படுத்தி மர்மநபர்கள் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள தெருவிளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?