திட்டுவிளையில் இருந்து மனதிட்டை செல்லும் சாலையில் ஒரு மின்கம்பத்தில் பொருத்தியுள்ள தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. மேலும், இந்த தெருவிளக்கு கம்பத்தில் இணைக்கப்படாமல் தொங்கிய நிலையில் காணப்படுகிறது. அது எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பழுதடைந்த மின்விளக்கை அகற்றிவிட்டு புதிய விளக்கை பொருத்தி எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜய்மணியன், மனதிட்டை