பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட மார்த்தால் பகுதியில் நாராம்பிள்ளை காம்பவுண்டு செல்லும் சாலையில் தெரு விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இரவு நேரத்தில் அந்த பகுதி மிகவும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி பழுதடைந்த மின் விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின் விளக்குகள் பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஹக்கீம், திட்டுவிளை.