சாலையின் நடுவே மின் கம்பம்

Update: 2022-07-16 16:18 GMT

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு மஞ்சக்குட்டை கிராமம் வழியாக செல்ல வேண்டும். இந்த நிலையில் அசம்பூரில் இருந்து மஞ்சக்குட்டைக்கு இடையே சாலை விரிவாக்கம் பணி நடைபெற்றது. பணியின் போது சாலையோரத்தில் இருந்த மின்கம்பம் ஒன்றை அகற்றாமல் அதை சாலையின் நடுவில் விட்டு சாலை விரிவாக்கம் பணி செய்து முடிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மின்கம்பங்களில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பத்தை அகற்ற மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஷ், ஏற்காடு.

மேலும் செய்திகள்