சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி தொளசம்பட்டி பிரிவு ரோடு 1-வது வார்டு குமார விலாஸ் காட்டில் சேதமடைந்த மின்கம்பம் உள்ளது. அந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் விழுந்து எலும்புகூடுபோல் ஆபத்தான நிலையில் உள்ளது. வேகமாக காற்று அடித்தால் விழுந்து விடும் நிலையில் உள்ள மின்கம்பத்தை விரைவில் அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜெயராமன், தாரமங்கலம், சேலம்.