மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு, கிழவீதியில் உயர் கோபுர மின் கம்பம் உள்ளது. இதில் உள்ள மின் விளக்குகள் கடந்த சில நாட்களாக எரிவது இல்லை. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்து உள்ளது. இருட்டாக இருப்பதால் இந்த பகுதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள் , திருவெண்காடு.