நடவடிக்கை எடுக்கப்பட்டது

Update: 2022-09-17 09:15 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட சரக்கல்விளை கால்வாய் கரையில் உள்ள கம்பத்தில் மின் விளக்குக்காக 'சுவிட்ச்' பெட்டி பொருத்தப்பட்டுள்ளது. இது திறந்த நிலையிலும், தாழ்வாகவும் காணப்பட்டது. அந்த வழியாக செல்லும் சிறுவர்கள் பெட்டியில் கைகளை வைத்து விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழைய சுவிட்ச் பெட்டியை அகற்றிவிட்டு புதிய பெட்டி அமைத்தனர். செய்தி ெவளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்