தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் முதல் நாகமரை வரை செல்லும் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் ஏரியூர் அருகே உள்ள காமராஜாபேட்டையில் சாலையின் குறுக்கே மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் சாலையை கடக்கும் கனரக வாகனங்கள், போர்வெல் வாகனங்கள் மற்றும் கரும்பு, தீவனப்புல் ஏற்றி செல்லும் வாகனங்கள் இந்த கம்பியை உரசியவாறு செல்கிறது. எனவே விபத்துகள் ஏற்படும் முன் இந்த மின்கம்பிகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நாகராஜ், ஏரியூர், தர்மபுரி.