உயர்கோபுர மின்விளக்கு

Update: 2022-09-09 16:19 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா இண்டூர் கிராமத்தில் குப்புசெட்டிப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் பஸ் நிறுத்தம் 4 சாலைகளை இணைக்கும் இடமாக உள்ளது. இங்கு உயர்கோபுர மின் விளக்கு இல்லாததால் வாகனங்களில் வருகிறவர்களுக்கு சாலையில் மக்கள் நடமாட்டம் தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. சிலர் மது குடித்துவிட்டு பாட்டில்களை சாலையில் வீசிவிட்டு செல்கின்றனர். எனவே இந்த பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவி, இண்டூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்