தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் கூட்ரோடு பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த உயர்கோபுர மின்விளக்கு பழுதாகி ஒளிரவில்லை. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் இதுநாள் வரை உயர்கோபுர மின்விளக்கு பழுதை சீர்செய்திட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரவு நேரங்களில் இந்த பகுதியில் விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர்கோபுர மின்விளக்கை ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருண், நல்லம்பள்ளி. தர்மபுரி.