எரியாத சிக்னல் விளக்குகள்

Update: 2022-09-04 16:59 GMT

சேலம் மாவட்டம் எருமாபாளையம் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலை காமராஜர் சிலை அருகே உள்ள சிக்னலில் பொதுமக்கள் கடந்து செல்ல கிராஸ் ரோடு அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக சிக்னல் விளக்குகள் மற்றும் அந்த பகுதிகளில் சாலை விளக்குகள் எரிவதில்லை. இதனால் அந்த சாலையில் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சிக்னல் விளக்குகளையும், சாலை விளக்குகளையும் சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கஸ்தூரி, எருமாபாளையம், சேலம்.

மேலும் செய்திகள்