சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா எடப்பட்டியில் இருந்து வாழப்பாடி செல்லும் வழியில் நெய்யமலை பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. அந்த பஸ் நிறுத்தம் அருகே உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் கீழே விழும் அபாயத்தில் உள்ளது. இந்த வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்களும் செல்கின்றன. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், எடப்பட்டி, சேலம்.