கூத்தாநல்லூர் தாலுகா, வடபாதிமங்கலம், சோலாட்சியிலிருந்து, குலமாணிக்கம் செல்லும் சாலையில் இரவு நேரங்களில் பெண்கள் உட்பட அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமானோர் சென்று வருகின்றனர். ஆனால், இந்த சாலையில் மின் விளக்கு வசதி இல்லாமல் உள்ளது. இதனால், அப்பகுதி இருள் சூழு்ந்து உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்று வர வேண்டி உள்ளது. அதனால், குறிப்பிட்ட பகுதியில் மின் விளக்கு அமைத்து தர வேண்டும்.
பொது மக்கள், குலமாணிக்கம்