தெருவிளக்கு எரியவில்லை

Update: 2022-08-26 16:30 GMT

சேலம் மாவட்டம் சன்னியாசிகுண்டு குமரன் நகர் பகுதியில் தெருவிளக்கு எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் இரவு நேரத்தில் கடும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் தேள், பாம்பு என விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. குழந்தைகள், பெண்கள் வீட்டை வெளியே வர அச்சப்படுகிறார்கள். இதுபற்றி புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி விரைவில் நடவடிக்கை எடுத்து தெருவிளக்கை சரிசெய்து எரிய செய்ய வேண்டும்.

-ராமதந்திரன், சன்னியாசிகுண்டு, சேலம்.

மேலும் செய்திகள்