பனப்பாக்கத்தை அடுத்த வேலியநல்லூர் கிராமத்தில் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் வேறு வழியின்றி விவசாய நிலங்களுக்குள் செல்கிறது. இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவுப்பணியை மேற்கொள்ள வைத்திருந்த நெல் நாற்றங்கால் நீரில் மூழ்கி அழுகும் நிலை உள்ளது. சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பட்டாபிராமன், பனப்பாக்கம்.