வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2022-12-25 10:28 GMT

செங்கம் -திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கோனாக்குட்டை கேட் பகுதியில் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சாத்தனூர் செல்லும் சாலை சந்திப்பு உள்ளது. இந்தச் சாலை சந்திப்பில் அவ்வபோது வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. சாத்தனூரில் இருந்து திருவண்ணாமலை நெடுஞ்சாலைக்கு வரும் வாகனங்கள் சாலை சந்திப்பில் எதிரில் வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. இரவில் போதிய வெளிச்சம் இல்லாததால் சாலை சந்திப்பு இருப்பது நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை. இதனால் பகல் நேரம் மட்டுமல்லாமல் இரவிலும் அடிக்கடி விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே இந்தச் சாலை சந்திப்பில் எச்சரிக்கை பலகைகள் வைத்து, பழுதடைந்துள்ள சிறு பாலத்தையும் சீரமைக்க வேண்டும். சாத்தனூர் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

-வேலுமணி, செங்கம்.

மேலும் செய்திகள்