நாட்டறம்பள்ளி ஒன்றியம் புல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளத்தூர் பகுதியில் பயணிகள் நிழற்குடை மாட்டுத் தொழுவமாக மாறி விட்டது. அதில் மாடுகள் கட்டப்பட்டு வருவதால் தற்போது பெய்து வரும் மழைக்கு பயணிகள் நிற்கக்கூட இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடையை பொதுமக்கள் பயன்படுத்த ஆவண செய்வார்களா?
-மணிவண்ணன், திம்மாம்பேட்டை.