Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Dec 2025 1:04 PM GMT
சிவக்குமார் | திருவள்ளூர்
#61727

சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள்

சாலை

செங்குன்றம் ஜி.என்.டி. சாலையில் இருபுறமும் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த வழியாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் கடந்து செல்ல கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றன. போலீஸ் நிலையத்தை ஒட்டியே வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவது வேதனையின் உச்சமாக உள்ளது. சாலையோரத்தில் பொறுப்பற்று நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றி, போக்குவரத்து நெரிசலுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2025 1:03 PM GMT
ராம் | திருவள்ளூர்
#61726

நிழற்குடையை ஆக்கிரமித்த செடிகொடிகள்

நிழற்குடையை ஆக்கிரமித்த செடிகொடிகள்போக்குவரத்து

திருவள்ளூர் மாவட்டம் பெரிய குப்பம் பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடையின் பின்புறம் செடிக்கொடிகள் மிகுதியாக வளர்ந்து உள்ளது. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் நிழற்குடையில் அமர முடியாத நிலையில் உள்ளது. மேலும் செடிகளில் இருந்து பூச்சிகள் வரும் அபாயமும் உள்ளது. இந்த பகுதி மக்கள், வேலைக்கு செல்பவர்கள், மாணவ-மாணவிகள் அனைவரும் இந்த நிழற்குடையை பயன்படுத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செடிகளை அகற்றி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2025 1:02 PM GMT
சுந்தரவேலு | திருவள்ளூர்
#61725

கழிவு நிறைந்த கால்வாய்

கழிவு நிறைந்த கால்வாய்கழிவுநீர்

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூரில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளி தெருவில் மழைநீர் வடிகால் கால்வாய் உள்ளது. தற்போது அந்த கால்வாய் முழுவதும் கழிவுநீர், குப்பைகள் ஆக்கிரத்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கடி, நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அந்த சாலையில் செல்லும்போது மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்கள் மூக்கினை மூடிக்கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2025 1:00 PM GMT
சுகுமார் | திருவள்ளூர்
#61724

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரயில் நிலையத்திலிருந்து தக்கோலம் வரை செல்லும் பாதையில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றனர். திடீரென அந்த சாலையில் ஒரு பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகின்றனர். மேலும் மழைக்காலங்களில் பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2025 1:05 PM GMT
ஜெயராமன் | திருவள்ளூர்
#61723

வீட்டை உரசும் மின்வயர்கள்

வீட்டை உரசும் மின்வயர்கள்மின்சாரம்

திருவள்ளூர் மாவட்டம்பூவிருந்தவல்லி தாலுக்கா, வரதராஜபுரத்தில் உள்ள தெருக்களில் அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் வீடுகளை ஒட்டி அமைந்துள்ளதால், அதன் வயர்கள் வீடுகளில் உரசும் நிலையில் உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடனே தினந்தோறும் கழிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2025 12:58 PM GMT
அருள் | சென்னை
#61721

சேதமடைந்த நடைபாதை

சேதமடைந்த நடைபாதைசாலை

சென்னை பெரம்பூர் நியூ பேரான்ஸ் சாலையில் சென்னை மாநகராட்சி வடியா பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு திடல் உள்ளது. அந்த பகுதி மக்கள் பூங்காவில் தினமும் நடைபயிற்சி, சிறுவர் மாலை நேரங்களில் விளையாடுதல் போன்று பயன்படுத்தி வந்தனர். ஆனால் இந்த பூங்காவில் உள்ள நடைபாதைகள் சில இடங்களில் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள் அதில் நடக்கும் போது காயப்படும் நிலை ஏற்படுகிறது. எனேவ மாநகராட்சி அதிகாரிகள் பூங்காவின் சேதமடைந்த நடைபாைதயினை சரிசெய்து தர வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2025 12:57 PM GMT
பிருத்திவிராஜ் | சென்னை
#61720

ஆபத்தான மின்மாற்றி

ஆபத்தான மின்மாற்றிமின்சாரம்

சென்னை கொரட்டூர் சாந்தி நகர் அதிக பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதி. இந்த பகுதியில் உள்ள மின்மாற்றியில் மின் வயர்கள் ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டு உள்ளன. இதனால் மழைக்காலங்களில் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சாலையில் செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். வயர் தொங்கிக்கொண்டு இருப்பதால் கீழே விழுந்துவிடும் அபாய நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து பெரும் விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2025 12:55 PM GMT
நித்திஷ் | சென்னை
#61719

வர்ணம் இல்லா வேகத்தடை

வர்ணம் இல்லா வேகத்தடைசாலை

சென்னை பள்ளிக்கரணை, நாராயணபுரத்தில் உள்ள ராஜேஷ் நகர் பகுதியின் ஏரிக்கரை சாலையில் வேகத்தடை உள்ளது. இந்த வேகத்தடையில் பூசப்பட்டிருந்த வர்ணம் அழிந்து தற்போது வர்ணம் இல்லாமல் இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்து உள்ளகின்றனர். வர்ணம் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வர்ணம் பூசி விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2025 12:54 PM GMT
சமூக ஆர்வலர் | சென்னை
#61718

தெருநாய்கள் தொல்லை

தெருநாய்கள் தொல்லைமற்றவை

சென்னை தாம்பரம் மாடம்பாக்கம் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக நடமாடுகின்றன. இது வாகனங்கள் அதிகமாக வந்து செல்லும் பகுதி. மேலும் தெருநாய்கள் அதிகமாக உள்ளதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2025 12:52 PM GMT
சிவலிங்கம் | சென்னை
#61717

புகார் எதிரொலி

புகார் எதிரொலிசாலை

சென்னை அடையாறு பகுதியில் கஸ்தூரிபாய் நகர் 5வது மெயின் ரோடு மற்றும் ஆறாவது மெயின் ரோடு இந்த இரண்டு சாலையும் குண்டும் குழியுமாக இருந்தது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் கடந்த வாரம் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக மின்சார வயர்களை பாதுகாப்பான வகையில் பூமிக்கு அடியில் புதைத்துவிட்டு சென்றனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற ‘தினத்தந்தி‘ பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick