Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
31 July 2022 3:09 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#5324

பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீர்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாகலஅள்ளி ஊராட்சி மருளுக்காரன்கொட்டாய் கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் அங்குள்ள அரசு பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீரிலேயே மாணவ-மாணவிகள் சிரமத்துடனே நடந்து சென்று வருகின்றனர். எனவே பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றி, மேலும் மழைநீர் தேங்காதபடி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுபா, பாகலஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 3:08 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#5323

இருவழிச்சாலையாக மாற்றப்படுமா?

சாலை

தர்மபுரி ‌முதல் ஆட்டுகாரம்பட்டி வரை செல்ல இரு வழிச்சாலை உள்ளது. தினந்தோறும் அதிக அளவில் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் தர்மபுரி நகருக்கு இந்த சாலையில் சென்று வருகிறார்கள். சாலை குறுகிய சாலையாக உள்ளதால் இந்த பகுதியில் ஏராளமான விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தர்மபுரி முதல் பென்னாகரம் வரை இருவழி சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோவிந்தசாமி, பென்னாகரம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 4:02 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#5140

பாலம் சீரமைக்கப்படுமா?

சாலை

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் உத்தமசோழபுரம் ஆதிதிராவிடர் தெரு உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆதிதிராவிடர் தெருவிற்கு வரும் வழியில் சிறிய பாலம் ஒன்று உள்ளது. அந்த பாலத்தின் வழியாக தான் அனைத்து வாகனங்களும் செல்ல முடியும். இந்த பாலம் மழையால் இடிந்து விழுந்துவிட்டது. இதுபற்றி புகார் அளித்தும் பலன் இல்லை. விபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் பாலத்தை சீரமைக்க வேண்டும். -ராமலிங்கம், உத்தமசோழபுரம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 4:01 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#5137

பயனற்ற நிழற்கூடம்

பயனற்ற நிழற்கூடம்மற்றவை

சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்த சிங்கிரிப்பட்டி ஊராட்சியில், மாங்காடு நீரேற்று நிலையம் அருகில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. அந்த நிழற்கூடத்தை சுற்றிலும் செடி,கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. அதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நிழற்கூடத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதர்களை அகற்றி நிழற்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். -சீ.சென்னகிருஷ்ணன், சிங்கிரிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 3:59 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#5135

'தினத்தந்தி'க்கு பாராட்டு

தினத்தந்திக்கு பாராட்டுட்ரெண்டிங்

சேலம் அம்மாபேட்டை 34-வது வார்டு ஜோதி தியேட்டர் கிழக்கு தெருவில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் தண்ணீர் தொட்டி உடைந்து சேதம் அடைந்து இருந்தது. இதனால் தண்ணீர் வீணாகிறது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் உடைந்த குடிநீர் தொட்டியை அகற்றி புதிய குடிநீர் தொட்டியை வைத்து பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் அந்தபகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.-சரவணன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 3:56 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#5131

பஸ்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதி

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டதால் பஸ்கள் அந்த வழியாக சென்று வருகிறது. இதனால் பழைய பஸ் நிலையம் வழியாக பஸ்கள் செல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். சமீபத்தில் அரசு பஸ்கள் மட்டும் அந்த வழியாக புதிய பஸ் நிலையம் சென்று வந்தது. தற்போது அரசு பஸ்களும் பழைய பஸ் நிலையத்துக்கு வராததால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அரசு மற்றும் தனியார் பஸ்கள் பழைய பஸ் நிலையம் வழியாக புதிய பஸ் நிலையம் சென்று பிற ஊர்களுக்கு இயக்க அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 3:55 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#5130

சேதமடைந்த ஊராட்சி மன்ற கட்டிடம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் சேளூர்-கந்தம்பாளையம் மெயின் ரோட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சேளூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டிடம் சேதமடைந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் கட்டிடத்தின் மேல் பகுதியில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்கள் தண்ணீரில் நனைந்து வீணாகும் நிலை உள்ளது. எனவே ஊராட்சி மன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சக்திவேல், சேளூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 3:54 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#5128

புதருக்குள் குடிநீர்தொட்டி

புதருக்குள் குடிநீர்தொட்டிதண்ணீர்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் இருந்து மரூர்பட்டி வழியாக முதலைப்பட்டி புதூருக்கு செல்லும் சாலையில் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி உள்ளது. தற்போது அந்த குடிநீர் தொட்டியை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து படர்ந்து ஆக்கிரமித்துள்ளன. மேலும் குடிநீர் தொட்டியின் அருகே செடி, கொடிகள் அதிகம் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இதனால் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. எனவே செடி, கொடிகளை அகற்றி குடிநீர் தொட்டியை தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுந்தரம், முதலைப்பட்டி புதூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 3:37 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#5125

உயர் கோபுர மின்விளக்கு எரிவதில்லை

மின்சாரம்

கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஆவின் மேம்பாலம் அருகே உயர்மின் கோபுர விளக்கு உள்ளது. சேலம்-திருவண்ணாமலை, சென்னை-பெங்களூரு முக்கிய சந்திப்பு சாலையாக உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் உயர் கோபுர மின்விளக்கு எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் சாலையை கடந்து செல்வதற்கு அச்சப்படுகிறார்கள். அதிகாரிகள் உயர்கோபுர மின் விளக்கை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 3:37 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#5124

சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி

சுற்றுச்சுவர் இல்லாத பள்ளிமற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் விளையாட்டு மைதானம் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளது. மேலும் பள்ளியின் நுழைவுவாயில் கேட் பழுதடைந்து பல நாட்கள் ஆகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி விளையாட்டு மைதானத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். -அஜய், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 3:34 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#5123

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி 28-வது வார்டுக்குட்பட்ட சான சந்திரம் கடவுள் நகரில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்லவும், வாகனங்கள் ஓட்டி செல்லவும் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சாலையை சீரமைத்து மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? -சி.ராமாஞ்சி ரெட்டி, சானசந்திரம், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 3:33 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#5122

உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டலாமா?

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகர சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சிறுவர்கள் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச்செல்கினர். மேலும் எதிரே வரும் வாகனங்கள் மீது மோதுவது போலவும், காதை கிழிக்கும் அளவிற்கு ஹாரன் அடிப்பது போன்ற செயல்கள் பொதுமக்கள், மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே போலீசார் அந்த பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - பாலு, ஓசூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick