Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Aug 2022 4:24 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#5560

குடிநீர் பிரச்சினை

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கமலாபுரம் கூட்டு ரோடு பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு ஆழ்துளை கிணறு மூலம் சிறு மின்விசை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு நீர் ஏற்றப்பட்டு அதிலிருந்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. நாளடைவில் அடிக்கடி பழுது காரணமாக சிறு மின்விசை நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் சப்ளை ஏற்றப்படவில்லை. இதனால் தொடர்ந்து பல மாதங்களாக இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் குடிநீர் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 4:21 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#5556

மாற்ற வேண்டிய மின்கம்பம்

மாற்ற வேண்டிய மின்கம்பம்மின்சாரம்

ஓசூர் சானசந்திரம் கடவுள்நகர் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தவாறும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் துண்டாகி விழும் அபாயத்தில் உள்ளது. எனவே விபத்து எதுவும் ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.முருகன், ஓசூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 4:18 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#5555

பஸ் வசதி வேண்டும்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் சூலாமலை ஊராட்சி மேல்கொட்டாய் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிக்கு பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலகம் செல்வோர், பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி செல்ல வேண்டுமென்றால் அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரப்பம் பஸ் நிலையத்திற்கு வர வேண்டும். எனவே இப்பகுதி மக்களுக்கு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும். -ராமு, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 4:17 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#5554

பழுதடைந்த சாலை

சாலை

கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் பல இடங்களில் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்ல சிரமமாக உள்ளது. இதன் காரணமாக அடிக்கடி விபத்தில் சிக்க நேரிடுகிறது. குறிப்பாக ராயக்கோட்டை மேம்பாலம் முதல் தின்னகழனி செல்லும் சாலை வரையில் பல இடங்களில் சாலை குண்டும், குழியுமாக உள்ளன. எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முரளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 3:30 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#5339

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்தண்ணீர்

சேலம் இரும்பாலை மேம்பாலத்திற்கு அருகே உள்ள சுரங்கப்பாதையில் குடிநீீர் குழாய் உடைந்து நீரூற்று போல்தண்ணீர் வீணாக வெளியேறி செல்கிறது. குடிநீர் பராமரிப்பு பணியினை மேற்கொள்ளும் அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து குழாயை சரிசெய்தால் குடிநீர் வீணாவதை தவிர்க்கலாம். -பூபதி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 3:29 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#5337

சாலை புதுப்பிக்கப்படுமா?

சாலை

சேலம்- கரூர் ரெயில்வே பாதையையொட்டி செல்லும் சர்வீஸ் ரோடு அமானி கொண்டலாம்பட்டி- தம்மநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் மழைக்காலங்களில் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பார்களா? -அய்யமுத்து, தம்மநாயக்கன்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 3:27 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#5335

உடைந்த தரை கற்களால் மக்கள் அவதி

உடைந்த தரை கற்களால் மக்கள் அவதிமற்றவை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் எஸ்.வாழவந்தி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கடந்த ஆண்டு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதில் அலுவலக தரைதளத்தில் டைல்ஸ் கற்கள் ஒட்டப்பட்டது. தற்போது டைல்ஸ் கற்கள் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அலுவலகத்துக்கு வரும் முதியோர்கள் உடைந்த டைல்ஸ் கற்களில் நடக்கும்போது அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உடைந்த டைல்ஸ் கற்களை அகற்றிவிட்டு புதிய கற்களை ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெகநாதன், எஸ்.வாழவந்தி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 3:25 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#5333

சீமைக்கருவேல மரங்கள் வெட்டி அகற்றப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தொடர் மழையின் காரணமாக சேந்தமங்கலம் அருகே பொம்மசமுத்திரம் ஏரி நிரம்பியது. தற்போது இந்த ஏரியில் அதிகளவில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. இதனால் ஏரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விளைநிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் சூழல் உள்ளது. எனவே ஏரியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரகுநாதன், காந்திபுரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 3:24 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#5331

அறிவிப்பு பலகை வைக்கலாமே!

மற்றவை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சேந்தமங்கலம் வழியாக செல்லும்போது வழிதெரியாமல் அங்குள்ள பெரிய மாரியம்மன் கோவில் தெருவில் நுழைந்து விடுகின்றனர். பின்னர் அந்த பகுதி பொதுமக்களிடம் கேட்டு காந்திபுரம் சென்று அடிவார சாலையை சென்றடைகின்றனர். எனவே சேந்தமங்கலம் பிரதான சாலையில் கொல்லிமலை செல்லும் சாலை குறித்த அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரவணன், சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 3:14 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#5329

வேகத்தடைகள் வேண்டும்

சாலை

ஓசூர் அசோக் பில்லர் பகுதியிலிருந்து பெரியார்நகர் வரை செல்லும் உள்வட்ட சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதி சாலையில் ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவகுமார், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 3:12 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#5327

பயன்பாட்டுக்கு வராத கழிப்பறைகள்

பயன்பாட்டுக்கு வராத கழிப்பறைகள்மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் மல்லப்பாடி கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட தனிநபர் கழிப்பறைகள் 3 ஆண்டு்களுக்கு முன் கட்டப்பட்டது. இந்த கழிப்பறைகள் பயன்பாட்டிற்கு வராமலேயே பராமரிப்பு இன்றி ேசதமடைந்து ெசடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து தனிநபர் கழிப்பறைகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவார்களா? -வெங்கடேஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 3:11 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#5325

சீரமைக்க வேண்டிய கிரிவலப்பாதை

மற்றவை

கிருஷ்ணகிரி பழையபேட்டை கவீஸ்வரன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று சிறப்பு பூஜை செய்து, சுவாமி கிரிவலம் வருவது வழக்கம். இதற்காக கிருஷ்ணகிரி மலையை சுற்றிலும் கிரிவலப்பாதை அமைக்கப்பட்டது. நாளடைவில் இப்பாதை பராமரிக்காததாலும், கற்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களாலும் முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சுவாமி கிரிவலம் செல்லாமல் கோவிலை மட்டும் சுற்றி வருகிறது. தற்போது கிரிவலம் செல்ல திட்டமிட்டுள்ளதால் இப்பாதையை விரைவில் சீரமைக்க வேண்டும். -மணிகண்டன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick