Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Aug 2022 3:40 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#5767

அரசு பள்ளி அருகே ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் செயல்பட்டு வரும் அரசினர் தொடக்கப்பள்ளி அருகிலேயே சாக்கடை கால்வாய் அமைந்துள்ளது. இந்த சாக்கடை கால்வாய் மூலம் அதிக கொசு தொல்லை இருப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் பள்ளி மாணவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சாக்கடையால் சுகாதார ்கேடு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நோய் பரவும் அபாயம் உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.. -முத்துமணி, ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 3:35 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#5766

தார்சாலையின் நடுவே பள்ளம்

தார்சாலையின் நடுவே பள்ளம்சாலை

தர்மபுரி- பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகில் தார்சாலை நடுவே 3 மாதத்திற்கு முன்பு 1 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. தற்போது மழை பெய்து சாலை முழுவதும் மழைநீர் நிரம்பி காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் பள்ளம் தெரியாமல் குழியில் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார்சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும். -கஜேந்திரன், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 5:55 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#5591

வாகனங்கள் நிறுத்தப்படுவது தடுக்கப்படுமா?

வாகனங்கள் நிறுத்தப்படுவது தடுக்கப்படுமா?மற்றவை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பஸ் நிலையத்தில் ஒரு பகுதியில் கூட்டுறவு சங்க மருந்து கடை உள்ளது. அந்த கடை முன்பு வெளியூர் செல்பவர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி சார்பில் பலமுறை அறிவுறுத்தியும், அறிவுப்பு பலகை வைத்தும், அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள், பஸ் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் மருந்து கடை முன் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 5:45 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#5590

பாலம் அமைக்க கோரிக்கை

பாலம் அமைக்க கோரிக்கைபோக்குவரத்து

சேலம் மாவட்டம் மேச்சேரி ஊராட்சி ஒன்றியம் தீராம்பட்டி பகுதியில் சின்ன ஏரி உள்ளது. இந்த ஏரி உபரி நீர் திட்டம் மூலம் தற்போது நிரம்பியது. இதன் காரணமாக உபரிநீர் அருகில் உள்ள வீடுகளுக்கு செல்வதால் பொது மக்கள் அவதி அடைகின்றனர். எனவே அந்த பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். -கவின், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 5:39 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#5588

நிறுத்தப்பட்ட பஸ்கள்

போக்குவரத்து

சேலம் தாரமங்கலத்தில் இருந்து ஓமலூருக்கு காலை 7.15 மணி முதல் 9 மணி வரை 3 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அலுவலக வேலைக்கு செல்லும் ஊழியர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் மீண்டும் 3 பஸ்களையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமரேசன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 5:35 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#5586

தெருநாய்கள் பிடிக்கப்படுமா?

மற்றவை

சேலம் கோரிமேட்டில் இருந்து ஏ.டி.சி. நகர் செல்லும் சாலையில் ஆத்துக்காடு அருகில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் பொது மக்களை துரத்தி துரத்தி கடிக்கிறது. இதனால் பொதுமக்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -சேகர், ஆத்துக்காடு, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 5:33 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#5585

கண்காணிப்பு கேமரா

மற்றவை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த வி.புதுப்பாளையத்தில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. பெண்கள், குழந்தைகள் இரவில் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். -பி.கோகுல், வி.புதுப்பாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 5:32 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#5584

சேறும், சகதியுமான ஆஸ்பத்திரி வளாகம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் காந்திபுரம் மாதா கோவில் பஸ் நிறுத்தம் அருகே அரசு கால்நடை ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு மழை பெய்யும்போது ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் கால்நடைகளை சிகிச்சைக்காக கொண்டு வருபவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜன், காந்திபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 4:58 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#5579

குடிநீர் குழாய் உடைப்பு

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே கம்மம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வங்கி உள்ளது. இந்த வங்கி முன்புறம் காடையம்பட்டியில் இருந்து தொப்பூர் பகுதிக்கு செல்லும் மேட்டூர் குடிநீர் குழாய் உடைந்து கடந்த சில வாரங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. எனவே இந்த உடைப்பை சீர்செய்து பாதுகாப்பான குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெய், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 4:57 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#5578

வேகத்தடை அமைக்க வேண்டும்

சாலை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள ஜக்கம்பட்டி பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இதனால் இந்த பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ளது. இந்த பகுதியில் தினமும் சிறு, சிறு விபத்துக்கள் நடக்கிறது. எனவே இந்த பகுதியில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பரசுராமன், ஜக்கம்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 4:55 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#5576

சேதமடைந்த மின் வயர்கள்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் புதிய பஸ் நிலைய பகுதியில் ஆங்காங்கே மின் வயர்கள் சேதமடைந்து அறுந்து தொங்கி கொண்டு இருக்கின்றன. இந்த வயர்களில் சாலையில் செல்லும் வாகனங்கள் உரசியபடி செல்கிறது. எனவே அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன் வயர்களை சீரமைக்க வேண்டும். -கார்த்திக், முள்ளுவாடி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 4:53 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#5575

நோய் பரவும் அபாயம்

நோய் பரவும் அபாயம்குப்பை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் கடைவீதி மற்றும் பஸ் நிலைய மையப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த குப்பைகளை தினமும் அள்ளாததால் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும். -காந்தி, ஏரியூர். தர்மபுரி

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick