Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Aug 2022 3:55 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#5781

மூடப்படாத கழிவுநீர் பள்ளம்

கழிவுநீர்

சேலம் டி.வி.எஸ். சுடுகாடு நாகம்மாள் தோட்டம் அருகில் கழிவுநீர் குழாய் பதிப்பதற்கு 50 அடி நீளத்தில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. அந்த பள்ளம் சரியாக மூடப்படாமல் கிடக்கிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழியை உடனடியாக மூட வேண்டும். -மணிவண்ணன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 3:54 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#5780

மழைநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

கழிவுநீர்

சேலம் மாவட்டம் மேச்சேரி சந்தை மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் பிரிவு சாலையின் பகுதியில் மழைநீர் செல்ல கால்வாய் வசதி இல்லை. அதனால் மழைக்காலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. கொசுக்கள் உற்பத்தியாகி தொல்லையாக இருக்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மேச்சேரி பேரூராட்சி நிர்வாகம் மழைநீர் செல்ல கால்வாய் அமைக்க முன்வருவார்களா? -சி.துரை, மேச்சேரி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 3:53 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#5779

'தினத்தந்தி'க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

சேலம் மாநகராட்சி 19-வது வார்டு ஜாகீர்அம்மாபாளையம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் குப்பைகள் அள்ளாமல் குவிந்து இருந்தது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அங்கு குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றினர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். -கண்ணபிரான்,சேலம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 3:52 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#5777

கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா?

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு 2 நாட்கள் விழாக்கள் நடக்கிறது. அதனை பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவ்வாறு வரும்போது சில இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வரும்போது அதில் உள்ள சைலன்சரை கழட்டி விட்டு அதிக சத்தத்துடன் வருகின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இதுபோன்று செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோகன், சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 3:51 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#5775

பயன்படாத விளையாட்டு மைதானம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் வடுகமுனியப்பன் பாளையம் ஊராட்சியில் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் காட்சி அளிக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் தார்சாலையில் விளையாடும் நிலை உள்ளது. இதுபற்றி புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவர்களின் நலன் கருதி செடி, கொடிகளை அகற்றி மைதானத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -மகேந்திரன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 3:50 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#5774

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பகுதியில் கே.கே.பி. தெரு, மேல தெரு, கோனார் தெரு ஆகிய பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகளை தெருநாய்கள் துரத்தி துரத்தி கடிக்கின்றன. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தெரு நாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்திரசேகர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 3:48 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#5773

தெருநாய்களால் அச்சம்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி கே.சி.சி நகரில் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. தெருநாய்கள் தெருவில் செல்லும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக குரைத்துக்கொண்டும், வாகனங்களில் செல்பவர்களை பின் தொடர்ந்து துரத்திக்கொண்டும் செல்கின்றன. மேலும் குழந்தைகள், பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -சா.ரவிச்சந்திரன், கே.சி.சி.நகர், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 3:47 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#5772

சீரமைக்க வேண்டிய சாலை

சாலை

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட விகாஸ் நகர், அன்னை நகர், எஸ்.எம்.நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மழையால் மிகவும் சேதமடைந்து உள்ளது. வயதானவர்கள், பெண்கள் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்க வேண்டும். -எஸ்.அரவிந்த், எஸ்.எம்.நகர், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 3:46 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#5771

நோய் பரவும் அபாயம்

குப்பை

ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தர்கா அருகே சந்திராம்பிகை ஏரி உள்ளது. இந்த பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. ஏரிக்கரையோரம் குப்பைகள், கெட்டுப்போன இறைச்சி மற்றும் கோழிக்கழிவுகளை சிலர் கொட்டி செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்தபடி செல்லும் அவல நிலை உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இதனை கண்காணித்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -எம்.மணி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 3:45 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#5770

ஆபத்தான சாலை

ஆபத்தான சாலைசாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் காரகுப்பம் ஊராட்சி அருகே சின்னஏரி குட்டை பகுதியில் எர்கெட் செல்லும் சாலையில் இருபுறங்களிலும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடக்கிறது. தடுப்புச்சுவர் அருகில் 10 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் அந்த சாலையைத்தான் பயன்படுத்த வேண்டும். அந்த பகுதியில் தெரு விளக்கு இல்லாததால் இரவு நேரத்தில் சாலையை கடந்து செல்பவர்களுக்கு விபத்து ஏற்படலாம். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி ஆபத்தான நிலையில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 3:41 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#5769

தார்சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே அச்சம்பட்டிக்கு செல்லும் சாலையானது மிகவும் சேதமடைந்து உள்ளது. தார்சாலையில் ஆங்காங்கே ஜல்லிகற்கள் பெயர்ந்துள்ளதால் சாலையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே இந்த தார்சாலையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். -ராஜராஜன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 3:41 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#5768

பள்ளிக்கு காம்பவுண்டு சுவர் கட்டப்படுமா?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மிட்டாதின்னஅள்ளி ஊராட்சி கொமத்தம்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு காம்பவுண்டு சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் மது அருந்துவது, சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. இதனை தடுக்கும் வகையில் பள்ளியை சுற்றி காம்பவுண்டு சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெகன், கொமத்தம்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick