Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 Aug 2022 2:46 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#5984

மின்கம்பத்தை மாற்றலாமே!

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் வெட்டுக்காடு தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. அந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தபடி உள்ளது. அதிக காற்று அடித்தால் கூட மின்கம்பம் விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அந்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் வைக்க வேண்டும். -சிங்காரம், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 2:46 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#5983

ஆற்றில் தேங்கிய கழிவுகள்

ஆற்றில் தேங்கிய கழிவுகள்மற்றவை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பெய்த தொடர் மழையால் அடிவாரத்தில் ஓடும் கருவாட்டு ஆற்றில் வெள்ள நீர் பாய்ந்து செல்கிறது. அதில் அப்பகுதியில் வெட்டி வீசப்பட்ட மரத்துண்டு, செடி, கொடி கழிவுகள் அடித்து வரப்பட்டு அங்கு தேங்கி கிடக்கிறது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, கொல்லிமலை, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 2:44 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#5982

அடிக்கடி மின்சாரம் நிறுத்தம்

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த அலவாய்பட்டி கிராமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி அறிவிக்கப்படாமல் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள், பள்ளி மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும். மேலும் மின்சாரம் நிறுத்தம் குறித்து மின்வாரிய அலுவலர்கள் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட வேண்டும். -வேலு, வெள்ளை பிள்ளையார் கோவில், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 2:44 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#5981

ஆபத்தான மரம்

ஆபத்தான மரம்மற்றவை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தில் கருவாட்டு ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் ஓரம் குடிநீர் கிணறுகளை பராமரிக்கும் பணியாளர் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள ஒரு மரத்தின் வேர் அரிக்கப்பட்டு எப்போது வேண்டுமானாலும் விழுலாம் என்ற நிலையில் காணப்படுகிறது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள மரத்தால் அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் அதனை வெட்டி அகற்ற வேண்டும். -மணிவேல், கொல்லிமலை, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 2:41 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#5979

பஸ் நிறுத்தத்தில் தேங்கும் மழைநீர்

தண்ணீர்

ஓசூர்- தளி ரோட்டில் ெரயில்வே கேட்டுக்கு அருகே முனீஸ்வரன் நகர் மேடான பகுதியில் இருந்து மழைநீர் சாலையில்் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்படிவரும் மழைநீர் தளி அட்கோ பஸ் நிறுத்தத்தில் குளம்ேபால் தேங்கி நிற்கிறது. இருபுறமும் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் மீது வாகனங்கள் சேற்றைவாரி இறைத்துவிட்டு செல்வதால் பயணிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். எனவே பஸ் நிறுத்தத்தில் மழைநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்கவேண்டும். -சூர்யா ரவிச்சந்திரன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 2:41 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#5977

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

மற்றவை

கிருஷ்ணகிரியில் சென்னை, பெங்களூரு, சேலம், புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலைகள் கிருஷ்ணகிரி வழியே செல்கிறது. இந்த முக்கியமான சாலைகளில் மாடுகள் சாலை நடுவில் சுற்றித்திரிகின்றன. இந்த மாடுகளை மேய்ச்சலுக்கு சாலையின் நடுவே விட்டு செல்கின்றனர். இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -கைலாசம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 2:40 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#5976

மினி பஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்திபெற்ற ஸ்ரீசந்திரசூடேஸ்வர சாமி மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஓசூர் பகுதியில் இருந்து மட்டுமின்றி, கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செல்கின்றனர். ஓசூர் பஸ் நிலையத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் மினி பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வி.விஜேந்திரன், சிவசக்திநகர், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 2:39 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#5973

சாலை புதுப்பிக்கப்படுமா?

சாலை புதுப்பிக்கப்படுமா?சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து அச்சமங்கலம் செல்லும் சாலை சிப்காட் பகுதியில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். விபத்து நடக்கும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்க வேண்டும். -மு.கிருஷ்ணமூர்த்தி, நேரலக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 2:38 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#5970

வேகத்தடைகள் வேண்டும்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த இண்டூர் அருகே குப்புசெட்டிப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் பஸ் நிறுத்தத்தில் 4 வழியை இணைக்கும் சாலை உள்ளது. கோவில் விழா நாட்களில் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எதிர்பாராத நேரத்தில் விபத்தில் காயம் அடைகின்றனர். எனவே அங்கு சாலையின் இருபுறமும் வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவி, இண்டூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 2:37 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#5969

சாக்கடை கால்வாயில் அடைப்பு

சாக்கடை கால்வாயில் அடைப்புகழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு-கேசர்குளி சாலையில் வாழைப்பழம் மண்டி அருகே சாலையோரம் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாயில் குப்பை கழிவு பொருட்கள் அடைத்துள்ளதால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பழனி, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 2:35 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#5967

பயன்படாத குடிநீர் எந்திரம்

பயன்படாத குடிநீர் எந்திரம்தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியை அடுத்த எம்.செட்டிஅள்ளி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரம் அமைக்கப்பட்டது. இந்த எந்திரம் கடந்த 2 ஆண்டுகளாக செயல்படாமல் அப்படியே காட்சி பொருளாகவே இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்திரத்தை சரி செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். -மாரியப்பன், எம்.செட்டிஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 2:34 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#5965

சாலையில் ஓடும் சாக்கடை கழிவுநீர்

கழிவுநீர்

தா்மபுாி மாவட்டம் ஏரியூர் அருகே ராமகொண்டஅள்ளியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊர் தெருக்களில் சாக்கடை கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு சாக்கடை கால்வாய் அமைத்து தர அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -வேலு, ராமகொண்டஅள்ளி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick