Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Aug 2022 4:39 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#6228

நோய் பரவும் அபாயம்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே வெட்டுக்காடு பஸ் நிறுத்தத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. பயணிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். கொசுக்கள் உற்பத்தியாவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அங்கு மழைநீர் தேங்காதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சங்கர், வெட்டுக்காடு, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 4:39 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#6227

சாலையில் ஓடும் கழிவுநீர்

சாலையில் ஓடும் கழிவுநீர்கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி ஆறாக ஓடுகிறது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் சாலையில் செல்லாத வகையில் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? -சிவா, ராசிபுரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 4:31 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#6221

சுகாதார சீர்கேடு

குப்பை

கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை செல்லும் சாலையில் கோழிக்கழிவுகள் தினமும் அதிகமாக கொட்டப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மூட்டை மூட்டையாக கிடக்கும் கோழிக்கழிவுகளை தெருநாய்கள் சாலையில் இழுத்து வந்து போடுவதால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.. எனவே கோழிக்கழிவுகளை அந்த சாலையில் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரமேஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 4:30 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#6220

சேதமடைந்த பள்ளிக்கட்டிடம்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பெலத்தூரை அடுத்த சூடாபுரம் கிராமத்தில் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் மாணவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மாணவர்களின் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் பள்ளிக்கட்டிடத்தை சீரமைக்க முன்வருவார்களா? -பெருமாள், சூடாபுரம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 4:28 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#6218

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரியில் காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும். -கருமலை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 4:27 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#6217

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்துக்கு இடையூறுதண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பசுவண்ணகோவில் பகுதியில் ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் மிகவும் இடையூறாக உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையினர் மழைநீர் வடிகால் அமைத்து தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை வேண்டும். -சரண், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 4:26 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#6216

தண்ணீர் இல்லாத சுகாதார வளாகம்

தண்ணீர் இல்லாத சுகாதார வளாகம்தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் இண்டூர் ஊராட்சியில் போலீஸ் நிலையம் அருகே ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஆண்கள் சுகாதாரம் வளாகம் அமைக்கப்பட்டது. இந்த சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் வசதி இல்லாததால் பூட்டியே வைத்துள்ளனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி தண்ணீர் வசதி ஏற்படுத்தி சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். -பரணி, இண்டூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 4:24 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#6214

பள்ளியில் தேங்கும் மழைநீர்

பள்ளியில் தேங்கும் மழைநீர்தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா மாதேஹள்ளி ஊராட்சியில் பிள்ளப்பநாயக்கனஹள்ளியில் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முன்பு மழைக்காலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அங்கு மழைநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். -விஸ்வநாதன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 4:23 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#6213

குண்டும், குழியுமான சாலை

குண்டும், குழியுமான சாலைசாலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி ஸ்தூபி மைதானம் முதல் கல்கூடஹள்ளி வரை பெல்ரம்பட்டி செல்லும் நெடுஞ்சாலை கடந்த ஓராண்டுக்கு முன்பு குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்டது. இந்த சாலை வழியாக பெல்ரம்பட்டி, கரகூர், சீரியம்பட்டி, அமானிமல்லாபுரம், மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான கிராம மக்கள் சென்று வருகின்றனர். குண்டும், குழியுமான இந்த சாலையால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மாற்று வழி இல்லாததால் ஒரே சாலையை பயன்படுத்தி வருவதால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 2:49 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#5987

பஸ் நிலையத்தில் சுகாதார கேடு

மற்றவை

சேலம் புதிய பஸ் நிலையம் உள்ளே செல்லும் ஒரு பகுதியில் பொதுமக்களும், பயணிகளும் கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு, அசுத்தம் செய்யாதீர் என்ற அறிவிப்பு பலகை வைத்தும் எந்தவொரு பயனும் இல்லை. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -புருஷோத், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 2:48 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#5986

சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?

கழிவுநீர்

சேலம் சூரமங்கலத்தை அடுத்துள்ள ஆண்டிபட்டியில் சேலத்தாம்பட்டிக்கு செல்லும் சாலையில் பல ஆண்டுகளுக்கு மேலாக சாக்கடை வசதி இல்லை. இதனால் அந்த பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். -சேகர், ஆண்டிபட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 2:47 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#5985

ரெயில் பயணிகள் சிரமம்

மற்றவை

சேலம் ரெயில் நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இங்குள்ள நடைமேடைகளில் ரெயில் பெட்டிகளின் எண், நிற்கும் இடங்கள் சில நேரங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுகிறது. சில நேரங்களில் எல்.இ.டி. டிஸ்பிளே மூலம் ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் கடந்த சில வாரங்களாக இந்த சேவை சரிவர இல்லை. இதனால் ரெயில்வே பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை சரி செய்ய ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாண்டி, பேர்லேண்ட்ஸ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick