Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 Aug 2022 4:38 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#6440

பராமரிப்பு இல்லாத பூங்கா

சாலை

தர்மபுரி மாவட்டம் ஏரியில் செயல்பட்டு வரும் அம்மா பூங்காவில் போதிய பராமரிப்பு இல்லாமல் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பூங்காவை பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். -அன்பழகன், ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 4:36 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#6438

குண்டும், குழியுமான சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு- தர்மபுரி செல்லும் பிரதான சாலையில் வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் வணிக வளாக நிறுவனங்கள் என எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. இந்தநிலையில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளம் தற்போது வரை சரி செய்யப்படாததால் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனேவ முக்கியமான இந்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 4:29 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#6433

மழைநீருடன் கலக்கும் கழிவுநீர்

கழிவுநீர்

கிருஷ்ணகிரியில் சென்னை சாலை, சேலம் சாலை, பெங்களூரு சாலையோரங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஒரு சில இடங்களில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து செல்வதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முகமது ரபிக், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 4:26 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#6430

செடி, கொடிகள் அகற்றப்படுமா?

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த சந்தாபுரம் ஊராட்சி 4-வது வார்டு பகுதிகளில் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. அந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. விஷப்பூச்சிகள் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை அகற்றி தூய்மையாக வைக்க வேண்டும். -சாரதி, சந்தாபுரம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 4:24 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#6428

பகலிலும் எரியும் விளக்குகள்

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் பிரதான தெருக்களில் சோலார் மின்விளக்குகள் மற்றும் சாதாரண மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு மற்றும் பகல் நேரங்களில் கூட இந்த மின்விளக்குகள் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கின்றன. இதனால் மின்சாரம் சிக்கனம் ஆவது தடுக்கப்படுவதோடு, வீண் மின்சார செலவும் ஆகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் பகலில் எரியும் மின்விளக்குகளை கண்காணித்து அவற்றை இரவில் மட்டும் எரிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -தினேஷ், மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 4:22 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#6425

ஆமை வேகத்தில் சாலை பணி

சாலை

தர்மபுரி ரெயில் நிலையம் சாலையில் 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இங்கு தார்சாலை அமைக்கும் பணி நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரியின் அருகில் உள்ள இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணியை விரைவில் முடிக்க வேண்டும். -பால்ராஜ், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 4:54 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#6237

விபத்து ஏற்படுத்தும் பள்ளம்

விபத்து ஏற்படுத்தும் பள்ளம்சாலை

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சார்வாய் பஸ் நிறுத்தம் அருகில் சாமியார் கிணறு பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு சாலையோரம் உள்ள பள்ளங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் வகையில் உள்ளது. சாலையோரம் உள்ள பள்ளங்களை மூடி வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும். -ஆகாஷ், தலைவாசல், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 4:53 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#6236

மழைநீர் வெளியேற்றப்படுமா?

மழைநீர் வெளியேற்றப்படுமா?தண்ணீர்

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி 51-வது வார்டு பெரிய கொண்டலாம்பட்டி ரெயில்வே பாலம் அருகே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் வீடுகளுக்குள் விஷப்பூச்சிகள் புகுந்து தொல்லையாக இருக்கிறது. மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக இந்த பகுதியில் இதே நிலை தான் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும். -பாபு, கொண்டலாம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 4:46 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#6235

சீரமைக்க வேண்டிய சாலை

சீரமைக்க வேண்டிய சாலைசாலை

சேலம் மூக்கனேரி ரோடு சரஸ்வதி நகர் வழியாக மகாலட்சுமி கார்டன் பேஸ்-1, பேஸ்-2 பகுதிகளுக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வாகனங்களில் செல்ல கடும் சிரமப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்்தும் எந்த பலனும் இல்லை. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்ைக எடுக்்க வேண்டும். -சுந்தரி, சின்ன திருப்பதி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 4:44 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#6234

சேதமடைந்த அங்கன்வாடி மையம்

சேதமடைந்த அங்கன்வாடி மையம்மற்றவை

சேலம் மகுடஞ்சாவடியில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இந்த பள்ளியின் மேற்கூரையில் தெர்மாகோல் சேதமடைந்து கீழே விழுகின்றன. எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் சீரமைக்க வேண்டும். அல்லது கான்கிரீட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.பிரபு, மகுடஞ்சாவடி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 4:41 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#6231

செடி, கொடிகள் வளர்ந்த பூங்கா

பூங்கா

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சி சர்க்கார் தோப்பு பகுதியில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைந்துள்ளது. அந்த பூங்கா பராமரிப்பு இன்றி செடி, கொடிகள் வளர்ந்து விஷப்பூச்சிகள் வாழிடமாக மாறி வருகிறது. எனவே பூங்காவில் உள்ள செடி, கொடிகளை அகற்றி தூய்மையாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் -யோகானந்த், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 4:40 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#6230

ஓடைகள் பராமரிக்கப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த கூனவேலம்பட்டி புதூரில் 2 ஓடைகள் உள்ளன. இந்த ஓடைகளில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. மரத்துண்டுகள், தென்னைமர கிளைகள், கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் மழைநீர் தேங்கி சாலையில் வெளியேறி ஓடுகிறது. எனவே இந்த ஓடைகளை பராமரித்து மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செந்தில், கூனவேலம்பட்டி புதூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick