Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Aug 2022 3:46 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#6850

நோய் பரவும் அபாயம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் ஒகேனக்கல் பிரதான சாலையில் மீன் மார்க்கெட் நடக்கிறது. சாலையோர மீன் மார்க்கெட்டில் வெட்டப்படும் மீன்களின் கழிவுகள் அங்கேயே கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் கழிவுகளை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தாஸ், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 3:17 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#6842

கொசு தொல்லை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே ராமகொண்டஅள்ளி பகுதியில் சமீப நாட்களாக கொசு தொல்லை அதகரித்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே பொது மக்களின் நலன் கருதி அந்த பகுதியில் கொசு மருந்து தெளிக்க வேண்டு்ம். -கிரி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 3:15 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#6841

பள்ளி முன்பு தேங்கும் மழைநீர்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பிளப்பநாயக்கனஅள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முன்பு மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. அந்த பகுதி சேறும், சகதியுமாக உள்ளதால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் சேற்றில் நடந்து வரும் நிலை உள்ளது. எனவே பள்ளி முன்பு மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேந்தன், பிளப்பநாயக்கனஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 5:38 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#6470

வேகத்தடை அமைக்க வேண்டும்

சாலை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த மணப்பள்ளியில் இருந்து ராமநாயக்கன்பாளையம் செல்லும் சாலையில் எஸ்.வாழவந்தி பிரிவு உள்ளது. இதில் ஒரு பகுதியில் மட்டும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. மணப்பள்ளியில் இருந்து வரும் பகுதியில் வேகத்தடை இல்லாததால் அந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே மனப்பள்ளியில் இருந்து வரும் சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் -ராமமூர்த்தி, பாலப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 5:55 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#6467

சேறும், சகதியுமான சாலை

சேறும், சகதியுமான சாலைசாலை

சேலம் மாவட்டம் 26-வது வார்டு சின்னேரிவயல்காடு நேதாஜி தெருவில் உள்ள சாலை சேதமடைந்து சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த சாலை இதே நிலையில் தான் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது விபத்துகள் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைப்பார்களா? -ஊர்பொதுமக்கள், சின்னேரிவயல்காடு, சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 5:30 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#6466

வாகனங்களால் மாணவர்கள் அவதி

வாகனங்களால் மாணவர்கள் அவதிபோக்குவரத்து

சேலம் மாவட்டம் ஜாரி கொண்டலாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். இந்தநிலையில் பள்ளி நுழைவு வாயில் முன்பு காலை முதல் மாலை வரை இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை நிறுத்தி சாலையை ஆக்கிரமிக்கின்றனர். இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி அங்கு வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பார்களா ? -எஸ்.டி.வெங்கடேசன், ஜாரிகொண்டலாம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 5:28 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#6464

சாய்ந்த நிலையில் மின் கம்பம்

சாய்ந்த நிலையில் மின் கம்பம்மின்சாரம்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கண்காணிப்பட்டியில் கம்பம் மெயின் ரோட்டின் அருகே சாய்ந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுத்து சாய்ந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும். -இளவரசன், கண்காணிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 5:27 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#6463

பள்ளம் சரி செய்யப்படுமா?

சாலை

சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சி பஸ் நிலையம் முன்பு குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் நடந்தன. இதற்காக கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன. அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த பள்ளம் மூடப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பள்ளத்தை சரி செய்வார்களா? -கோபால், இடங்கணசாலை, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 5:25 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#6461

பூட்டியே கிடக்கும் மகளிர் கட்டிடம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து கொல்லிமலை அடிவாரத்திற்கு செல்லும் சாலையில் மகளிர் சுயஉதவி குழு கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் சில நாட்கள் தான் அங்கு மகளிர் சுயஉதவி குழுவினர் கூட்டம் நடத்தினர். அதில் இருந்து தற்போது வரை அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. எனவே மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாராயணன், காளப்பநாயக்கன்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 5:23 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#6460

தெருநாய்களால் அச்சம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இப்பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் குழந்தைகள், முதியவர்கள் என்று பலரையும் துரத்தி துரத்தி கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் வீதிகளில் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 4:41 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#6444

ஆபத்தான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் கொண்டை ஊசி வளைவு அருகில் சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. வாகன ஓட்டிகள் தினமும் சாலையை அச்சத்துடன் கடந்து செல்கிறார்கள். இப்போது இந்த பகுதியில் கனமழை பெய்து வருவதால் சாலையானது ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். -ஆதிப் மிர்சா, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 4:40 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#6441

குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்

சாலை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சந்தை தோப்பு பகுதியில் அமைந்துள்ள போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு உள்ள பிரதான சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பென்னாகரத்தில் இருந்து ஒகேனக்கல் செல்லும் இந்த பிரதான சாலையில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், பென்னாகரம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick