Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Aug 2022 4:42 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#7100

சுகாதார சீர்கேடு

குப்பை

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் கோழி இறைச்சி கடைகள் உள்ளன. அந்த கடைகளில் உள்ள இறைச்சி கழிவுகள் அனைத்தும் பழைய பாலம் வாணியாற்றில் கொட்டுகிறார்கள். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். -சந்துரு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 4:56 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#6893

சாலை சரி செய்யப்படுமா?

சாலை

சேலம் மாவட்டம் தலைவாசலில் இருந்து சதாசிவபுரம் வழியாக செல்லும் சார்வாய் சாலை முக்கிய பகுதியாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதன் வழியாக செல்லவே பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமப்படுகின்றனர். சாலையை சரிசெய்ய வேண்டும் என மனு கொடுத்தும் பலன் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சரிசெய்ய வேண்டும். -ஆறுமுகம், சார்வாய், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 4:55 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#6892

பயனற்று கிடக்கும் குடிநீர் தொட்டி

மற்றவை

சேலம் மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மாதாகோவில் அருகே தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி சுமார் 2 வருடங்களாக பயனற்றுகிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் இந்த தண்ணீர் தொட்டியை பயன்பாட்டுக்கு தொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -தனசேகர், ஆண்டிப்படி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 4:53 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#6891

சாலையில் ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளி செல்லியம்பாளையம் கிராமத்தில் 4-வது வார்டில் அருந்ததியர் தெரு உள்ளது. இந்த தெருவில் மழை நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். நோய்தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும். -அன்பரசு - சேலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 4:52 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#6890

நோய் தொற்று ஏற்படும் அபாயம்

மற்றவை

சேலம் மாவட்டம் ஓமலூ‌‌ர் தாலுகா கருப்பூர் பேரூராட்சி தட்டாஞ்சாவடி பள்ளம் பால் சொசைட்டி அருகில் உள்ள தெருவின் மேற்கு திசையில் மழை நீர் செல்லும் பாதை முற்றியிலும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கிறது அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது, எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்தோஷ், கருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 4:50 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#6889

வாகன ஓட்டிகள் அவதி

மற்றவை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம், பெரியகரசப்பானையம் நான்கு ரோட்டில் இருந்து கருப்பண்ணார் கோவில் வழியாக கட்டமராபாளையம் செல்லும் வழியில் கயிறு தயாரிக்கும் ஆலை உள்ளது. இதனால் சாலை முழுவதும் தேங்காய் மட்டை நார் கிடப்பதால் முன்னாள் செல்லும் வாகனங்களால் துகள் பறக்கிறது. இது இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்களில் படுவதால் வாகனம் ஓட்ட சிரமப்படுகின்றனர். எதிர்பாராத நேரத்தில் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பரமசிவம், ஓலப்பாலையம்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 4:49 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#6888

சாலை புதுப்பிக்கப்படுமா?

சாலை

நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் கலெக்டர் அலுவலகம் உள்ளது. அதை அடுத்து சிலுவம்பட்டி செல்லும் சாலை உள்ளது. அந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இரவு நேரங்களில் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சாலையை புதுப்பித்து தர ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சங்கர், நல்லிபாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 4:23 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#6876

மழைநீர் கால்வாய்

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக ஓசூர் பஸ் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் மழைநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது . இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே மழை நீர் தங்கு தடையின்றி செல்ல அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் . -சந்துரு, ஓசூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 4:21 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#6872

பஸ்நிலையத்தில் பயணிகள் அவதி

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பஸ் நிலையம் பகுதியில் ஆங்காங்கே சிமெண்டு தரை சேதமடைந்து பள்ளம் பள்ளமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பயணிகள், பொதுமக்கள் பஸ் நிலையத்தில் பஸ் ஏறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியை ஆய்வு செய்து சேதமடைந்துள்ள சிமெண்டு தரையை சீரமைத்து மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். -புருசப்பன், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 4:19 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#6869

சாலையில் கிடக்கும் குப்பைகள்

குப்பை

கிருஷ்ணகிரியில் சென்னை- பெங்களூரு, சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் போகும் வழியில் அதிகளவு குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. அந்த குப்பைகளை அங்கு வரும் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து கிளறி விடுகின்றன. இதனால் குப்பைகள் சாலையில் சிதறிக்கிடக்கின்றன. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமகிருஷ்ணன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 4:18 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#6868

சேறும், சகதியுமாக மாறிய சாலை

சேறும், சகதியுமாக மாறிய சாலைசாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே கத்திரிப்பள்ளியில் இருந்து நெடுஞ்சாலை கிராமம் வரை செல்லும் சாலை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சேதமடைந்துள்ளது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செல்ல கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அந்த சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும். -அருணா, கத்திரிப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Aug 2022 4:16 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#6866

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு எம்.ஜி.ரோட்டில் உழவர் சந்தை முன்புள்ள கழிவுநீர் கால்வாயில் கோழி கழிவுகள், உணவக கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும். -ஜீவா, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick