Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Aug 2022 5:21 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#7115

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

பரமத்திவேலூர் தாலுகா பரமத்தியில் இருந்து மாணிக்கம்நத்தம் செல்லும் சாலையில் முக்கியமான தொழிற்சாலைகள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் உள்ளன. இந்த தொழிற்சாலை மற்றும் பெரிய நிறுவனங்களுக்கும் கிராமங்களுக்கும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள், கனரக வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன. இந்த சாலை மிகவும் தேமடைந்து உள்ளது. எனவே அதிகரிகள் இந்த சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும். - சக்தி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 5:07 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#7111

கழிப்பிட வசதி வேண்டும்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து கொல்லிமலை அடிவாரத்திற்கு பிரதான சாலை செல்கிறது. இந்த நிலையில் அந்த மலைக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலை நேரங்களில் காளப்பநாயக்கன்பட்டி வருகின்றனர். அங்கு கழிப்பிட வசதி இல்லாதலால் சுற்றுலா பயனிகள் அவதியடைகின்றனர். எனவே அதிகாரிகள் அங்கு கழிப்பிட வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவசங்கரன், காளப்பநாயக்கன்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 5:05 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#7110

மாணவர்களின் ஆபத்தான பயணம்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை பஸ் நிறுத்தத்தில் இருந்து கலங்காணி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் அரசு பஸ்களில் படியில் தொங்கியபடி செல்கின்றனர். அசம்பாவிதம் ஏதேனும் நடக்கும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இதுபோன்ற ஆபத்தான பயணத்தை தடுக்க வேண்டும். -பிரபு, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 5:03 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#7109

சாலை சரிசெய்யப்படுமா?

சாலை

சேலம் பொன்னமாபேட்டை தம்பிகாளியம்மன் கோவில் 2-வது தெருவில் உள்ள சாலை மண்சாலையாக உள்ளது. தற்போது பெய்த மழையால் இங்குள்ள சாலை சேறும்சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகனஓட்டிகளும் சிரமத்துடன் செல்கிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தும் பலனில்லை. தற்போது மீண்டும் மழைபெய்ய உள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சரிசெய்யவேண்டும். -துரை, தம்பிகாளியம்மன் கோவில் தெரு, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 5:02 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#7108

சீரமைக்க வேண்டிய சாலை

சாலை

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 5 தியேட்டர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும். -சங்கர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 5:01 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#7107

சுகாதார சீர்கேடு

மற்றவை

சேலம் மாவட்டம் நரசோதிப்பட்டி காமராஜர் காலனி 3-வது வீதியில் மழைநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர எடுக்க வேண்டும். -கண்ணன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 5:00 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#7106

'தினத்தந்தி'க்கு பாராட்டு

தினத்தந்திக்கு பாராட்டுமின்சாரம்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கங்காணிப்பட்டி கம்பம் மெயின் ரோட்டின் அருகே மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது அந்த மின்கம்பத்தை சரி செய்து மாற்றி அமைத்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி மக்கள் நனறி தெரிவித்தனர். -இளவரசன், கங்காணிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 4:49 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#7105

கனரக வாகனங்களால் இடையூறு

போக்குவரத்து

பெங்களூரு, ஓசூர் பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக கனரக வாகனங்களில் ராட்சத எந்திரங்கள் ஏற்றி வரப்படுகின்றன. இந்த வாகனங்கள் சாலையோரத்தில் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு வரக்கூடிய சர்வீஸ் சாலையில் லாரிகள் நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் பலரும் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 4:48 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#7104

மதுக்கடையை இடமாற்றம் செய்யலாமே!

மற்றவை

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே அரசு மதுபானக்கடை உள்ளது. புதிய பஸ் நிலையத்திற்கு பல்வேறு மாவட்ட, மாநிலத்தில் இருந்து பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த மதுக்கடை பஸ் நிலையம் எதிரே அமைந்துள்ளதால் அங்கு வரும் மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு தகராறு செய்வதை காணமுடிகிறது. மேலும் அங்கு வரும் பயணிகளுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது. எனவே பஸ் நிலையம் அருகே உள்ள மதுக்கடையை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -முகமது ரபிக், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 4:46 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#7103

குண்டும் குழியுமான சாலை

சாலை

ஓசூர் உழவர் சந்தை அருகே நீலமேக நகரில் இருந்து மவுனகுரு கோவில் வரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும். -சங்கர், ஓசூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 4:45 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#7102

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு சாலை மற்றும் போலீஸ் குவார்ட்டர்ஸ் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு சாலைகளில் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள் பழுதடைந்து பல மாதங்களாகியும் சரி செய்யப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே பழுதாகி எரியாத இரு உயர்கோபுர மின் விளக்குகளை சீர்செய்ய வேண்டும். -சுதாகர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 4:43 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#7101

சாலையில் ஓடும் மழைநீர்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் மேச்சேரி பிரதான சாலையில் அழகாகவுண்டனூர் பகுதியில் சாலையில் மழைநீர் ஓடுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீர் செல்ல கால்வாய் அமைத்து தர வேண்டும். -ரவி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick