Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 Aug 2022 5:11 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#7335

குப்பை தொட்டி வைக்கலாமே!

குப்பை தொட்டி வைக்கலாமே!குப்பை

சேலம் அழகாபுரம் 5-வது வார்டு பெரியபுதூர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் குப்பை தொட்டி இல்லாததால் அந்த பகுதி பொதுமக்கள் சாலையோரம் குப்பையை கொட்டுகின்றனர். பள்ளி அருகே குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மேலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் மாணவ, மாணவிகள் குப்பைகளை கடந்து செல்லும் போது மூக்கை பிடித்துகொண்டு செல்கின்றனர். இதனால் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் குப்பை தொட்டி வைத்து தினமும் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 5:10 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#7334

விவசாயிகள் அவதி

சாலை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், மோகனூர் மேம்பாலம் பகுதியில் இருந்து காவிரி பாலம் வரை பைபாஸ் சாலையில் இருபுறங்களிலும் ஏராளமான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் இடுபொருட்களை எடுத்துச் செல்லவும், விவசாய நிலங்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து செல்லவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அந்த பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். -காளியப்பன், மோகனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 5:08 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#7333

ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் காணாம்பாளையத்தில் இருந்து செம்மாண்டப்பட்டி செல்லும் தார்சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாது நிலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து நடக்க முடியாத அளவுக்கு காட்சி அளிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடனடியாக தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொன்னுதுரை, வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 5:07 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#7332

பஸ் நிலையத்தில் குவியும் குப்பைகள்

குப்பை

நாமக்கல் மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையில் உள்ள செம்மேட்டில் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் குப்பைகள் கொட்டுகின்றனர். இதனால் வேகமாக காற்று அடிக்கும் நேரத்தில் அந்த குப்பைகள் பஸ் நிலைய வளாகத்திற்குள் பரவி கிடக்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே மலைவாழ் மக்கள் நலன் கருதி அங்குள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். -கருணா, செம்மேடு, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 5:06 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#7331

தாமதமாகும் பாலம் அமைக்கும் பணி

தாமதமாகும் பாலம் அமைக்கும் பணிசாலை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா ஆரியூரில் இருந்து கொளத்தூர் செல்லும் சாலையில் முத்துசாமி கோவில் பிரிவு அருகே பள்ளமாக உள்ளது. பாலம் அமைப்பதற்காக அந்த பகுதி பள்ளமாக விடப்பட்டது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் பாலம் அமைக்காததால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தாமதமாக நடக்கும் பாலம் அமைக்கும் பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -குப்புசாமி, மோகனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 3:36 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#7311

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் இருந்து சூளகிரி செல்லும் சாலையில் தற்போது நெடுஞ்சாலை துறை சார்பாக தார்சாலை புதியதாக போடப்பட்டுள்ளது. தார்சாலை போடும்போதே வங்கி எதிரிலும், பழைய சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் பிரிவு ரோட்டிலும் வேகத்தடை அமைக்க பல முறை புகார் அளித்தும் இதுவரை அமைக்கவில்லை. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குறிப்பிட்ட இடங்களில் விரைவில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எம்.ரவிசங்கர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 3:35 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#7307

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக நகரில் பாகலூர் ரோடு, தாலுகா அலுவலக சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சாலைகளில் ஆங்காங்கே சிறிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -அன்சர், ஓசூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 3:34 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#7305

முட்புதர்களை அகற்ற வேண்டும்

முட்புதர்களை அகற்ற வேண்டும்மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தை அடுத்த முத்தம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் அமைந்துள்ளது. அந்த பள்ளி வளாகத்திற்குள் செடி, கொடிகள், முட்கள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இதனால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முட்புதர்களை அகற்றி தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராம், முத்தம்பட்டி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 3:32 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#7304

வேகத்தடைக்கு வர்ணம்

சாலை

தர்மபுரி நகரில் பள்ளி, கல்லூரி அமைந்துள்ள சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ள சாலைகளில் வேகத்தடைகள் அமைத்து வர்ணம் பூசினால் விபத்துகளை தவிர்க்கலாம். -கிருஷ்ணா, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 3:29 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#7299

ஜல்லி கற்கள் பரப்பிய சாலை

ஜல்லி கற்கள் பரப்பிய சாலைசாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளியில் 4 ரோட்டில் இருந்து ராயக்கோட்டை செல்லும் வழியில் புதிதாக சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் போடப்பட்டது. ஆனால் சாலை அமைக்கும் பணி மிகவும் தாமதமாக நடைபெறுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?. -பிரபாகரன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 3:28 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#7295

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஅள்ளி ஊராட்சியில் அவுசிங் போர்டு குடியிருப்பு உள்ளது. அங்கு சேரும் குப்பைகளை கடந்த சில நாட்களாக ரெயில்வே கேட் அருகே ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தினமும் குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வேல்முருகன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Aug 2022 5:22 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#7116

வாகன ஓட்டிகள் அவதி

மற்றவை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம், பெரியகரசப்பானையம் 4 ரோட்டில் இருந்து கருப்பண்ணார் கோவில் வழியாக கட்டமராபாளையம் செல்லும் வழியில் உள்ள தேங்காய் மட்டையில் இருந்து கயிறு தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. சாலை முழுவதும் தேங்காய் மட்டை நார் கிடப்பதால் முன்னாள் செல்லும் வாகனங்களால் துகள் பறந்து இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் முகத்திலும் கண்களிலும் படுவதால் வாகன ஓட்டிகள் அவதிபடும் நிலை உள்ளது எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்க்கை எடுக்க வேண்டும், -பரமசிவம், ஓலப்பாலையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick