Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 Aug 2022 4:42 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#7544

சுகாதார சீர்கேடு

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சி காந்திபுரம் மாதா கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து வையனை செல்லும் சாலை உள்ளது. அந்த சாலையோரத்தில் அடிக்கடி இறந்துபோன பன்றியை வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் அவ்வழியே செல்லும்போது துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மேலும் சுகாதார கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதுபோன்று செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஞானசேகரன், காந்திபுரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 4:40 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#7543

தண்ணீர் குழாய் சரிசெய்யப்படுமா?

தண்ணீர் குழாய் சரிசெய்யப்படுமா?தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் பெரியகரசபாளையம் நான்கு ரோட்டில் இருந்து ஓலப்பாளையம் செல்லும் சாலையில் விவசாய நிலத்திற்கு செல்லூம் தண்ணீர் குழாய் உடைந்து நீண்ட நாட்களாக தண்ணீர் வீணாகிறது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி வருகிறது. பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாத அளவு பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே உடைந்த தண்ணீர் குழாயை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பரமசிவம், ஓலப்பாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 4:30 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#7542

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

கிருஷ்ணகிரி நகரில் உள்ள தெருக்களின் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. சில தெருக்களில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. மழைக்காலம் தொடங்குவதால் மாநகராட்சி அதிகாரிகள் மக்கள் நலன் கருதி சாக்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆறுமுகம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 4:28 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#7541

ஏரியை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை

மற்றவை

கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி தேவ சமுத்திரம் ஏரி, புதூர் ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் ஆகாயத்தாமரை அதிகளவில் வளர்ந்து ஏரியே தெரியாத அளவிற்கு முழுமையாக ஆக்கிரமித்து உள்ளது. மேலும் இந்த ஏரியில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. ஏரியை தூர்வாரி மழைநீர் தேங்கி நிற்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -முகம்மதுஅலி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 4:27 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#7540

தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அங்கிநாயனப்பள்ளி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிருஷ்ணகிரி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் நெடுஞ்சாலையை கடக்க நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை மாணவிகளும், பேராசிரியர்களும் பயன்படுத்தாமல் நெடுஞ்சாலையை ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றனர். இதனால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே நெடுஞ்சாலை நடுவில் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும். -தண்டபானி, அங்கிநாயனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 4:26 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#7539

சீரமைக்க வேண்டிய சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மல்லப்பாடி ஊராட்சி முச்சானிமேட்டில் இருந்து சென்னை சாலையில் உள்ள அரசு மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரி வரை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி செல்லும் நிலைக்கு ஆளாகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே புதிய தார் சாலை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். -பழனிவேல், மல்லப்பாடி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 4:22 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#7538

தெருவிளக்குகள் வேண்டும்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சி கோழிமேக்கனூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. அங்கு 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். மலைப்பகுதியையொட்டி அந்த பகுதியில் தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. அந்தபகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் மதுபிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. இதுகுறித்து பல முறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் நலன் கருதி தெருவிளக்குகள் அமைக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 4:21 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#7537

பாழடைந்த அரசு நூலகம்

பாழடைந்த அரசு நூலகம்மற்றவை

தர்மபுரி மாவட்டம் புதுசோளப்பாடியில் அரசு நூலகம் அமைந்தள்ளது. அந்த நூலகம் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதன் காரணமாக நூலக கட்டிடத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி இருக்கிறது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து பாழடைந்த நூலகத்தை புத்துப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். -வீரமணி, புதுசோளப்பாடி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2022 4:19 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#7536

பயன்படுத்தாத குப்பைதொட்டிகள்

பயன்படுத்தாத குப்பைதொட்டிகள்குப்பை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே நாகமரை ஊராட்சி நெருப்பூர் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட புதிய குப்பை தொட்டிகள் பயன்படுத்தாமல் குப்பை மேட்டில் வீசப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் தேங்கி துருப்பிடித்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட குப்பைதொட்டிகள் முறையாக பயன்படுத்தாமல் குப்பை மேட்டில் கிடக்கின்றன. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -தென்னரசு, ஏரியூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 5:14 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#7338

புதிய நூலக கட்டிடம் கட்டப்படுமா?

புதிய நூலக கட்டிடம் கட்டப்படுமா?மற்றவை

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் கிளை நூலகம் சேதமடைந்து மிகவும் மோசமாக இருந்ததால், தற்போது தற்காலிகமாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிளை நூலகம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே புதிய நூலக கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை வேண்டும். -ந.கலைச்செல்வன், பெத்தநாயக்கன்பாளையம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 5:13 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#7337

சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?

கழிவுநீர்

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே வாழக்குட்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எருமநாயக்கன்பாளையம் கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் கழிவுநீர் செல்வதற்கு சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அங்கு சாக்கடை கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும். -சுரேந்திரன், எருமநாயக்கன்பாளையம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 5:12 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#7336

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

சேலம் கோரிமேட்டில் இருந்து ஏ.டி.சி. நகர் செல்லும் சாலையில் மசூதி அருகில் உள்ள சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சிறு விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. இந்த சாலையில் செல்லும் மாணவர்களும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும். -சதீஷ், கோரிமேடு, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick