Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 July 2022 3:31 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#5121

இருள்சூழ்ந்த பிரதான சாலை

மின்சாரம்

தர்மபுரி-பென்னாகரம் பிரதான சாலை இருவழிச்சாலையாக மாற்றப்பட்டு நடுவில் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. ரெயில்வே மேம்பாலம் முதல் 4 வழிச்சாலை வரை உள்ள பிரதான சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் இந்த சாலை இருள்சூழ்ந்து காணப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? -தமிழ்ச்செல்வன், சோகத்தூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 3:31 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#5120

ஆழ்துளை கிணறு சீரமைக்கப்படுமா?

தண்ணீர்

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் தண்ணீர் தேவை மற்றும் கோவிலை தூய்மைப்படுத்தும் பணிக்காக கோவில் வளாகத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு பழுதடைந்து விட்டது. இதனால் கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் தண்ணீர் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கந்தசாமி, குமாரசாமிபேட்டை, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 3:29 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#5119

இரவு நேரங்களில் பஸ் வசதி வேண்டும்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் ஊருக்குள் பகல் நேரத்தில் வந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இரவு நேரத்தில் வருவதில்ைல. இரவில் வரும் பஸ்கள் தொப்பூருக்குள் செல்லாமல் பயணிகளை, தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையிலேயே இறக்கி விட்டு செல்கின்றன. இதனால் இரவு நேரத்தில் பெண்கள் உள்ளிட்ட பயணிகள் அச்சத்துடனே சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் தொப்பூருக்கு நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்தால் பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். -ரவி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 3:27 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#5118

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா அண்ணாமலைஅள்ளி ஊராட்சி புதூரில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. இதனால் அந்தபகுதி பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ஏ.பி.வெங்கடேசன், அண்ணாமலைஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 5:02 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#4906

சேறும், சகதியுமான சாலை

சாலை

சேலம் யூனியன் ஆண்டிப்பட்டி ஊராட்சி 9-வது வார்டில் கிழக்கு வட்டத்தில் தார்சாலை மிகவும் மோசமாக உள்ளது. மழைக்காலங்களில் அந்த பகுதி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதுபற்றி புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்க வேண்டும். -மணிகண்டன், ஆண்டிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 5:01 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#4905

வேகத்தடை வேண்டும்

சாலை

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் அணியாபுரம் பஸ் நிறுத்தம் அருகே 4 சாலை சந்திப்பு உள்ளது. இந்த பகுதியில் வேகத்தடை இல்லாததால் 4 சாலைகளில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள் சந்திப்பு பகுதியில் வரும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சிறு சிறு விபத்துகள் நடந்துள்ளது. பெரிய அசம்பாவிதம் ஏற்படும் முன் அணியாபுரம் பஸ் நிறுத்தம் அருகே 4 சாலை சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். -ராமசாமி- அணியாபுரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 5:00 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#4904

மாற்று வழி ஏற்படுத்தப்படுமா?

சாலை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி சேந்தமங்கலம்- நாமக்கல் பிரதான சாலையில் உள்ளது. இந்த நிலையில் மாலையில் ஒரே நேரத்தில் மாணவிகள் வெளியேறுவதால் அப்பகுதியில் நெருக்கடி ஏற்படுகிறது. இதை தவிர்க்க பள்ளியின் பின்புறம் மாற்று வழி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாலதி, சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 4:58 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#4903

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா தோக்கவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஸ்ரீஅம்பாள் நகரில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகள், பெரியவர்கள் நடமாட அச்சப்படுகிறார்கள். எனவே நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும். -ராஜேஷ், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 4:57 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#4902

சாலையை பராமரிக்க வேண்டும்

சாலை

சேலம் 51-வது வார்டு சுபரியகவுண்டர் தோட்டம் சாலை முறையான பராமரிப்பு இல்லாததால் மழைகாலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் டெங்கு காய்ச்சலால் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பொது மக்களின் நலன் கருதி தண்ணீர் தேங்காதவாறு சாலைய சீரமைத்து கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தமிழ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 4:56 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#4901

சாலையை சீரமைக்க கோரிக்கை

சாலை

சேலம் ஆண்டிபட்டி ஊராட்சி 9-வது வார்டில் பெரியான்டிச்சி கோவில் தெருவில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கிவிடுவதால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைத்து புதியதாக தார் சாலை அமைக்க வேண்டும். -மணிகண்டன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 4:54 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#4900

சாக்கடை கால்வாய் தூர்வார வேண்டும்

கழிவுநீர்

சேலம் 4 ரோடு பெரமனூர் ஹவுசிங் போர்டில் உள்ள சாக்கடை கால்வாய் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் விஷப்பூச்சிகளின் தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரவீன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 3:32 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#4874

உடைந்த சோலார் மின்விளக்கு

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் பெங்களூரு- புதுச்சேரி நெடுஞ்சாலையும், தர்மபுரி-சென்னை நெடுஞ்சாலையும் சந்திப்பு சாலையில் உள்ள சோலார் பேனல் மின் விளக்கு கம்பமானது உடைந்து சாலையோரத்தில் கிடைக்கிறது. மிக முக்கிய சாலை சந்திப்பான இந்த இடத்தில் வெளிச்சத்திற்காகவும், கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்காகவும் அமைக்கப்பட்ட இந்த சோலார் மின் விளக்கை சரி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. -விஜயன், மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick