Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Aug 2022 3:45 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#8353

திறக்கப்படாத அரசு புதிய கட்டிடம்

திறக்கப்படாத அரசு புதிய கட்டிடம்மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பொம்மிடி ஊராட்சியில் கிராம மக்களின் தேவைக்காக பொம்மிடி- பாப்பிரெட்டிப்பட்டி மெயின் ரோட்டில் கிராம ஊராட்சி சேவை மையம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் கிராம மக்கள் தனியார் இ-சேவை மையங்களுக்கு சென்று வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து அரசு கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதாவது அங்கு இ-சேவை மையம் அமைத்தால்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 4:19 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#8192

மார்க்கெட்டில் குவியும் குப்பைகள்

மார்க்கெட்டில் குவியும் குப்பைகள்குப்பை

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் தினசரி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு மார்க்கெட் முன்பு கொட்டப்படும் குப்பைகள் தினமும் அள்ளப்படுவதில்லை. இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடப்பதுடன், துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே குப்பைகளை தினமும் அள்ளி தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -லெனின், தாரமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 4:18 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#8190

அடிப்படை வசதிகள் வேண்டும்

மற்றவை

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த எம்.ஜி.ஆர். காலனி மகாத்மா காந்தி வீதியில் 100 வீடுகள் உள்ளன. ஆனால் 50 வீடுகளுக்கு மட்டுமே காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மற்ற வீ்டுகளுக்கு காவிரி குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. மேலும் அங்கு சாக்கடை கால்வாய், சாலை போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லை. இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர முன்வரவேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 4:18 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#8189

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகுப்பை

சேலம் மாவட்டம் சங்ககிரி ஐவேலி ஊராட்சிக்குட்பட்ட அக்கமாபேட்டை, கெமிக்கல்ஸ் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் இறைச்சி கழிவுகள் மலைபோல் கொட்டி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் குப்பைகளை சிலர் தீ வைத்து எரிப்பதால் ஏற்படும் புகைமூட்டத்தால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதையும், குப்பைகள் எரிக்கப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரேம்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 4:17 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#8187

குண்டும், குழியுமான சாலை

குண்டும், குழியுமான சாலைசாலை

சேலம் மாவட்டம் ஏற்காடு ஒன்றியம் செம்மநத்தம் ஊராட்சியில் செங்களத்துபாடி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு 'லூப்' ரோடு முதல் செங்களத்துபாடி வரை உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும். -மூர்த்தி, செங்களத்துபாடி, ஏற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 4:14 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#8184

சேதம் அடைந்த தடுப்புச்சுவர்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் நுழைவுவாயின் அருகே கழிவுநீர் கால்வாயின் மேல் கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவர் இடிந்து சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் செல்கின்றனர். விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே பொதுமக்கள், பக்தர்களின் நலன்கருதி அங்குள்ள கழிவுநீர் வாய்க்கால் மேல் சேதம் அடைந்து காணப்படும் தடுப்புச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயசீலன், சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 4:13 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#8181

பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அண்ணா சிலை பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்லாததால் பயணிகள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அங்கு நிழற்கூடம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -பூபதி, வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 4:12 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#8180

குண்டும், குழியுமான சாலை

சாலை

ஓசூர் லட்சுமிதேவி நகரில் இருந்து பிருந்தாவன் நகர் வரை செல்லும் சாலை மிகவும் குறுகலாகவும், குண்டும், குழியுமாகவும் உள்ளது. பாகலூர் ஹட்கோ, என்.ஜி.ஜி.ஓ. காலனி, ஸ்ரீநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஓசூர் தர்கா பகுதியை சென்றடைய அந்த சாலை எளிதாக இருப்பதால் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே லட்சுமி தேவி நகர்-பிருந்தாவன் நகர் சாலையை விரிவாக்கம் செய்வதுடன், குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன் வருவார்களா? -முத்துச்சாமி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 4:11 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#8179

ஆபத்தான பயணம்

ஆபத்தான பயணம்போக்குவரத்து

கிருஷ்ணகிரியில் இருந்து வரட்டனப்பள்ளி வழியாக சென்று வரும் 23-ம் எண் பஸ்சில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கிய படி பயணம் ெசய்கிறார்கள். இப்படி தினந்தோறும் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்கிறார்கள். எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? -சென்னையன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 4:10 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#8177

ஏரியை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த பாலதோட்டனப்பள்ளி ரோட்டில் உள்ள பெரிய ஏரி, பல ஆண்டுகளுக்கு பிறகு தொடர் மழையால் நிரம்பி உள்ளது. இந்தநிலையில் ஏரியில் ஆகாயத்தாமரை படர்ந்து உள்ளதால் மாசு ஏற்பட்டு, நீர்நிலை கெடும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வம், தேன்கனிக்கோட்ைட, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 4:09 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#8176

அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

அடிக்கடி போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

கிருஷ்ணகிரி டவுன் பகுதியில் சேலம் ரோடு, கிளை சிறை ரோடு, சென்னை மற்றும் பெங்களூரு சாலைகள் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக காணப்படுகிறது. இந்த சாலையில் ஆங்காங்கே பஸ், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களை அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தி விடுகிறார்கள். இதனால் அங்கு நீண்டநேரமாக வாகனங்கள் காத்து நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ரமேஷ்குமார், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 4:06 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#8173

திறந்தவெளியில் சாக்கடை கால்வாய்

திறந்தவெளியில் சாக்கடை கால்வாய்கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி நான்கு ரோடு பகுதியில் சாக்கடை கால்வாயின் சிமெண்டு சிலாப்புகள் பெயர்ந்து காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே திறந்தவெளியில் ஆபத்தான நிலையில் உள்ள சாக்கடை கால்வாயின் சிமெண்டு சிலாப்புகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். -சேகர், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick